எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைவடையும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்படும் சரக்குகள் குறைந்த விலையிலேயே எதிர்காலத்தில் கொள்வனவு செய்யப்படும் என அவர் கூறினார்.

அதற்கமைய, இந்த விலைக் குறைப்பின் நன்மை நுகர்வோருக்கு வழங்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைக்கப்படும் பட்சத்தில் ஏனைய பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version