யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை காலை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே கந்தசாமி குணரட்ணம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version