சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

தொலைக்காணொளி ஊடாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பான அனைத்து தரப்பினரிடமிருந்தும் தற்போது சாதகமான மற்றும் நம்பிக்கையான பதில்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் சீனப் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் இந்தக் கலந்துரையாடலை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version