தென்னாப்பிரிகா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் தென்னாப்பிரிகா அணி, ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவ்வணி சார்பாக மார்க்ரம் 115 ஓட்டங்களையும் டீன் எல்கர் 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுக்க பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

தென்னாப்பிரிகாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version