பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.

அதன்படி, வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர் ஒருவர் அந்தப் பாடசாலையின் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்குச் செய்த இந்தச் செயல் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்தது.

மாணவியை தவறு செய்ய தூண்டும் நோக்கில் ஆசிரியர் தொடர்ச்சியாக வட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியை அனுப்பிய செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிந்த நபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த மாணவியின் தாய் கருத்து தெரிவிக்கையில், பாடசாலை அதிபர் தனது மகளை அலுவலகத்திற்கு வரவழைத்து பலர் முன்னிலையில் பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும் இதனால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்

Share.
Exit mobile version