கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், கொட்டதெனியாவ, மத்தியதலாவ, களுஅகல பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் இயக்குபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தொழில்நுட்பக் கோளாறினால் நிறுத்தப்பட்ட இயந்திரத்தை பரிசோதித்த போது, இயந்திரம் மீண்டும் இயங்கியதால், காயங்கள் ஏற்பட்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 37 வயதுடையவர். சம்பவம் தொடர்பாக கொட்டதெனியாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version