ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதியம் மற்றும் பணியாளர்கள் தொடர்பான பிரச்சினையால் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்..

வேலைநிறுத்தத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஜி.எம்.பி.தொழிற்சங்கத்தின் 11,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் யுனைட் யூனியனின் சில உறுப்பினர்களும் ஈடுபடுகின்றனர்.

ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சார்பாக பேசிய ஜி.எம்.பி. தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் ரேச்சல் ஹாரிசன், ‘அரசாங்கம் எந்தவொரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அவர்கள் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் ஊதியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுக்கின்றார்கள்.

அர்ப்பணிப்புள்ள சுகாதாரப் பணியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறும் அலைகளைத் தடுக்கப் போகிறோம் என்றால், ஊதியப் பிரச்சினையைத் தீர்ப்பது இன்றியமையாதது’ என கூறினார்.

Share.
Exit mobile version