இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உத்திகள் குறித்த விவாதிக்க தயார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்து விவாதத்தில் தன்னோடு நேருக்கு நேர் கலந்துகொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

சாத்தியமான தீர்வுகளைப் பற்றி விவாதிக்க இரு கட்சிகளும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப 2000, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி பல செயற்திட்டங்களை வெளியிட்டது என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய அரசியல் பற்றி பேசி சேறு பூசுவதை நிறுத்தி, பொருளாதார கொள்கைகள் குறித்த வெளிப்படையான விவாதத்திற்கு வருமாறு அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இருவரும் இறுதியாக 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது அமெரிக்காவில் நடைபெறுவதை போன்று நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version