பிரான்ஸின் பசிபிக் பிராந்தியமான நியூ கலிடோனியாவில் பார்வையாளர்கள் முன்னிலையில் சுறா தாக்கி, சுற்றுலாப் பயணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

59 வயதான அவுஸ்ரேலிய சுற்றுலா பயணி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நௌமியாவில் உள்ள பிரபலமான கடற்கரையில், கரையிலிருந்து சுமார் 150 மீ (500 அடி) நீந்திக் கொண்டிருந்த போது, சுறா தாக்கி, அவர் உயிரிழந்தார்.

அவர் பலமுறை கடித்து, கால் மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மூன்று வாரங்களில் சாட்டோ- ரோயல் கடற்கரைக்கு அருகில் இது மூன்றாவது சுறா தாக்குதல் ஆகும்.

அருகில் பயணித்த இரண்டு பேர் அந்த நபரை மீண்டும் கடற்கரைக்கு அழைத்து வந்து, அவசர சேவைகள் உதவியுடன் அவரை உயிர்ப்பிக்க முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை.

சுறா தாக்குல் நடத்திய நேரத்தில் பலர் தண்ணீரில் இருந்தனர் மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,

அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடற்கரைகளை மூடிவிட்டனர், மேலும் அருகிலுள்ள நீரில் சுறாக்களைப் பிடிக்க உத்தரவிட்டனர்.

வனுவாட்டுவின் தெற்கே அமைந்துள்ள நியூ கலிடோனியா, அவுஸ்ரேலியாவிற்கு கிழக்கே சுமார் 1,200 கிமீ (750 மைல்) தொலைவில் உள்ளது.

Share.
Exit mobile version