உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாத நிலையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாடு விசேட ஆணையாளர்களின் கீழ் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 19ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஆனால், அரசாங்கத்திடம் இருந்து நிதி கிடைக்காத காரணத்தால், தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதுடன், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம், மார்ச் மாதம் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

மாநகர சபைகளின் நிர்வாகம் மாநகர ஆணையாளர்களின் கீழும், நகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் நகர மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களின் கீழும் மாற்றப்படும் தெரியவருகிறது.

Share.
Exit mobile version