இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலுக்கு மாத்திரம் பயன்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார துறை முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

முட்டை இறக்குமதி மற்றும் கால்நடை அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பொது உபயோகத்திற்காக கடைகளில் விற்பதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பேக்கரிகளில் முட்டைகளைப் பயன்படுத்தும் போது கையுறைகளைப் பயன்படுத்தவும், முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் அல்லது அழிக்கவும், மீதமுள்ள முட்டை ஓடுகள் சுற்றுச்சூழலுக்கு விடப்படாமல் பார்த்துக் கொள்ளவும் அமைச்சர் அறிவுறுத்தினார். பறவைக் காய்ச்சல் வைரஸ் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது

Share.
Exit mobile version