(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை பாண்டிருப்பு 2ல் வாழ்ந்த புலம்பெயர் உறவுகளின் அனுசரனையில் பாண்டிருப்பு 2ல் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின் கட்டிடத்தில் சக்தி தையல் ஆடைத் தொழிலகம் சமய நிகழ்வுடன் திறந்து கைக்கப்பட்டது.

சக்தி ஆடைத் தொழிலகத்தின் இணைப்புச் செயலாளர் சீ.ரவிகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசய ராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இத் தொழிலகத்தை திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தினி யோகேஸ்வரன், விஷேட அதிதியாக சுவிற்சர்லாந்தின் புலம்பெயர் உறவுகளின் பிரதிநிதியும், இந்நிகழ்வுக்கு அனுசரனை வழங்கியவர்களின் ஒருங்கிணைப்பாளருமான இ.விஜயகுமாரன் மற்றும் அதிதிகளாக ஶ்ரீ அரசடியம்மன், ஶ்ரீ சித்தி விநாயகர் ஶ்ரீ வடபத்திர காளியம்மன் கோவில் தலைவர் சி.சண்முநாதன், ஶ்ரீ மகாவிஷ்ணு ஆலய தலைவர் ஆ.செல்லத்துரை, பாண்டிருப்பு 2B கிராம சேவகர் கே.வேதநாயகம் உட்பட மாதர் சங்கத்தினரும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Share.
Exit mobile version