சிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சிம்பாவேக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

இந்த தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில் 2 ஆவது இறுதியுமான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கி முதல் இன்னிங்சிற்காக 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 292 ஓட்டங்களை பெற, 177 ஓட்டங்கள் பின்னிலையொடு 2 ஆவது இன்னிங்ஸிற்காக சிம்பாவே அணி களமிறங்கியது.

இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் 173 ஓட்டங்களுடன் சுருண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது.

Share.
Exit mobile version