பிபில பொலிஸ் பிரிவில் தியகோபல கரகஹவெவை வசிப்பிடமாகக் கொண்ட 15 வயதான பாடசாலை மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 17 வயதான இளைஞன் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி, இன்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர், தனியார் வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இடையில் வழிமறித்த அவ்விளைஞன், பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார் என செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவ்விளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்திய பரிசோதனைக்காக மாணவி, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்