பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அச்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்வியியற் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட சுமார் 8,000 பேர் வெளியேறியுள்ளனர்.

எனினும், அவர்களை முறையாக பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான உரிய திட்டம் கல்வி அமைச்சிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version