தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலை மாணவர்களினால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று (சனிக்கிழமை) யாழ். பல்கலை கழகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது போராட்டத்தின் முன்னதாக பல்கலை வளாகத்தினுள் உள்ள பிரதான கொடி கம்பத்தில் கறுப்பு கொடியினை மாணவர்கள் ஏற்றியும் இருந்தனர்.

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவில் இரண்டாவது தடவையாக சுதந்திர தினத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏன்? எனவும் கேள்வி எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version