அண்மையில் துருக்கி நாட்டில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் இலங்கையர்கள் 16 பேரில், 15 பேர் பாதுகாப்பாக உள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இவர்களுள் ஒரு பெண் மட்டும் காணாமல் போயுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதரத்தின் கொன்ஸ்யூலர்அதிகாரி பபோதா பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 21000 பேர் வரை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பூமியதிர்ச்சியினால் துருக்கியில் 18342 பேர் இறந்துள்ளதுடன், சிரியாவில்3377 இறந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இன்றுடன்(10) சுமார் 100க்கு மேற்பட்ட மணித்தியாலங்கள் கடந்த நிலையில், காணாமல் போனோர்களை தேடும் பணி தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இருப்பினும் , கடும் குளிரான காலநிலை தொடருவதால் காணாமல் போனொரை தேடும் பணியில், மிகவும் கஸ்டமான சூழ்நிலையை முகம் கொடுப்பதாக , செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.