அரசியல் நோக்கத்துக்காக பிரபல்யமடையும் தேவை ஜனாதிபதிக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைத் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இதுவரை பொருளாதார மீட்சிக்கான கொள்கைத் திட்டங்களை முன்வைக்கவில்லை.

மாறாக, குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நாட்டை வலம் வந்து தேர்தல் பிரசாரம் செய்துகொள்கிறார்கள்.

உழைக்காமல் எவ்வாறு சொகுசாக வாழ்வது என்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் வியாபாரம் ஏதும் செய்வதில்லை. தொழில் செய்வதில்லை. ஆனால், சொகுசாக வாழ்கிறார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிறரை ‘திருடர்’ என விமர்சிக்கிறார். ஆனால், அரசியல் பிரசாரங்களுக்காக கோடிக்கணக்கில் தற்போது நிதியை செலவிடுகிறார்.

நாட்டு மக்கள் தம்மை தெரிவு செய்வார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது செயற்படுகிறார்கள்.

அரசியல் பேரணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முடியாது என்று குறிப்பிட்டோம். ஆனால், நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதியாக்கினார்கள்.

இறுதியில் நேர்ந்தது என்ன? நாங்களே அடிபட்டோம். ஆகவே, மக்கள் விடுதலை முன்னணியின் போலி பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாற்றமடையக்கூடாது.

போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள குழுவினர், சண்டியர்கள், சமூக விரோதிகள் தான் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளார்கள்.

மே 9 அன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களாக உள்ளார்கள். நாட்டு மக்கள் இவர்களையா தெரிவுசெய்யப் போகிறார்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version