நூற்றாண்டின் பேரழிவு என விபரிக்கப்படும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது.

எனினும், மீட்பு பணிகள் தொடருவதால் பேரழிவின் முழு அளவு இன்னும் தெளிவாக இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிபாடுகளில் இருந்து தப்பியவர்களைத் தேடி வருகின்றனர், ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணிநேரம் ஆகியுள்ளதால் அதன் நம்பிக்கை குறைந்து வருகின்றது.

உறைபனி நிலைமைகள் ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன, அவர்கள் இப்போது தங்குமிடம், தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

இதனிடையே, அடிப்படைக் கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உடனடி நிதியுதவி அடங்களாக உலக வங்கி, துருக்கிக்கு 1.78 பில்லியன் டொலர்கள் உதவியை வழங்கியுள்ளது.

ஆனால், 100,000 அல்லது அதற்கு மேற்பட்ட மீட்புப் பணியாளர்களின் முயற்சிகள் வாகனப் பற்றாக்குறை மற்றும் பாழடைந்த வீதிகள் உள்ளிட்ட பல தளவாடத் தடைகளால் தடைபட்டு வருகின்றன.

Share.
Exit mobile version