ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பான் கீ மூன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்துள்ளார்.

பான் கீ மூனை, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் பான் கி மூன், பசுமை அபிவிருத்தி, நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன், கார்பன் வெளியீட்டைக் குறைத்து நிலைபேறான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Exit mobile version