துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் எர்டோகனுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி வாயிலாக உரையாடினார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாரிய அழிவைச் சந்தித்துள்ள துருக்கி மக்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க இலங்கை மக்கள் தயாராக உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போயுள்ள இலங்கை பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

69 வயதான குறித்த பெண் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version