ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பான் கீ மூன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பான் கீ மூன் தனது பயணத்தின் ஒரு கட்டமாக இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.