இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதற்காக இந்திய அரசால் வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில் 50 பேருந்துகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.

இது தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இன்று (05) முற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்திய அரசாங்கத்திடம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 75வது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பஸ்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இலங்கைக்கு இதுவரை 165 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 500 பஸ்களை வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version