பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சர்வ கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றை விடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டியமை முக்கியமான விடயமாகும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மக்களின் நம்பிக்கை பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் அமைய வேண்டும்.
இலங்கையிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை மாற்றக் கூடிய ஒரு ஒன்றிணைந்த அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.