( கல்முனை நிருபர்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,
இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை எனும் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது

இதற்கமைய,கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின் நெறிப்படுத்தலிலும் கல்முனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் எம்.என்.எம்.அப்ராஸ் அவர்களின் ஏற்பாட்டிலும் கல்முனை மாநகரில் மர நடுகை நிகழ்வு,கல்முனை மாநகரசபை,கல்முனை பிரதேச செயலகம்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை வர்த்தக சங்கம்,உப்ட இதர அரச,தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் (04)இடம்பெற்றது

இதன் போது கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்,மாநகர சபை உறுப்பினர்கள்,கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் சரத் சந்திரபால அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் கங்கா சாகரிக தமயந்தி,
அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக் அலி,கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி,மாநகர உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அஸ்கி,
பொலிஸ்,விசேடஅதிரடிப்படை உயர் அதிகாரிகள் மாநகர சபை உத்தியோகத்தர்கள்,அரச,தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் இளைஞர்கள் என பலரும் கொண்டிருந்தனர்.

Share.
Exit mobile version