உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய தொகையை முழுமையாகவோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.