உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் வாக்குகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தபால் நிலையங்களில் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் அண்மையில் வெளியிடப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version