ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் திகதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின.

4,400 கோடி டொலர்களை இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டொலர்களுடன் தற்போது 15ஆவது இடத்தில் உள்ளார்.

முகேஷ் அம்பானி 8,370 கோடி டொலர்கள் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளார்.

Share.
Exit mobile version