தான் தவறு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாத நிலையில், மன்னிப்பு கோருவதற்கு அவருக்கு உரிமை இல்லை என, அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையிலும் தான் தவறு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாத நிலையொன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில், தவறு செய்யவில்லை என்று கூறிக்கொண்டு அதற்கு மன்னிப்பு கேட்பது அர்த்தமற்ற ஒரு சொல்லாகவே தான் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், அவ்வாறான மன்னிப்புக் கோரல் வெறும் அறிவிப்பு மாத்திரமே என்றும் அவ்வாறான மன்னிப்பு கோரல் தமக்கு தேவையில்லாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று(01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அருட்தந்தை சிறில் காமினி இந்த விடயத்தை தெரிவித்தார்