2022 ம் ஆண்டு கல்வி பொதத்தராதர சாதாரணதர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலை விண்ணப்பதாரிகள் உரிய பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தாமாகவே இணையத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளனது

இதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றை அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி செயலியான “Exams SRILANKA” ஐ பயன்படுத்தலாம்.

தேவைப்படும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்காக, பரீட்சார்த்திகள் விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை வைத்திருத்தல் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த நிலையில் பெப்ரவரி 28 ஆம் திகதி பிற்பல் 12 மணிக்கு மேல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதிகளை நீடிக்க எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

Share.
Exit mobile version