கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் வைத்து கடந்த 17ஆம் திகதி கழுத்து அறுத்து கொலை செய்யத குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (30) உத்தரவிட்டார்.

இன்றைய நீதவான் விசாரணையின் போது, உயிரிழந்த மாணவியின் தந்தையின் சாட்சியம் பிரதான நீதவான் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டதுடன், நீதவான் விசாரணை பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை.

Share.
Exit mobile version