பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 140 பேர் காயமடைந்தனர்.

தொழுகைக்காக ஏராளமான மக்கள் கூடியிருந்த மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக பொலிஸ்துறை அதிகாரி சிக்கந்தர் கான் தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பின் போது, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் அந்த இடிபாடுகளில் சிலர் அதில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகின்றது.

தற்கொலை குண்டுதாரி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்தபோது மசூதிக்குள் 150க்கும் மேற்பட்ட தொழுகையாளர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பெஷாவர் மசூதியில் தொழுகையின் போது நடந்த பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் இதுவரை எந்தவொரு குழுவும் அல்லது தனி நபரும் பொறுப்பேற்கவில்லை.

Share.
Exit mobile version