(எம்.என்.எம்.அப்ராஸ்)
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய
“வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” எனும் கருப்பொருளில் கல்முனை சமுர்த்தி வங்கி வலயங்களில் இன்று (29) மாபெரும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி அவர்களின் வழிநடத்தலில்,தலைமை பீட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களின் ஆலோசனைக்கமைய கல்முனைக்குடி வங்கி வலய முகாமையாளர் மோசேஸ் புவிராஜ்,தலைமையில் கடற்கரைப்பகுதி,
பாடசாலைகள்,மையவாடி மற்றும் பூங்காகளில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளி குடும்பங்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் தங்களது பங்களிப்பினை வழங்கி சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வழி நடத்துவோர்களாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதான நிகழ்வில் ஈடுபட்டனர்.