தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் (01) இலங்கையின் கிழக்கு கரையை அடைய அதிக சாத்தியம் உள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக இன்று (30) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version