அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன, ஞாயிற்றுக்கிழமை (29) காலை தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதியன்று உயர்தர பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பில் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை இலங்கை மின்சாரசபை செயற்படுத்தத் தவறியுள்ளது.
இந்நிலையில், மின்சாரசபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஆணைக்குழுவின் தலைவருக்கும் வலுச்சக்தி அமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.