பொருளாதார மறுசீரமைப்புக்காக சீர்த்திருத்தங்களை விரைவுப்படுத்துவதற்கும், வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும் இலங்கை தலைமைத்துவம் காட்டும் அரசியல் உறுதிப்பாடு மதிக்கதக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணப் பொதிக்கான அனைத்துத் தேவைகளையும் இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதேநேரம் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழைப் பெற்ற பின்னர் எதிர்கால செயற்பாடுகள் நிறைவு செய்யப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version