பொதுநலவாய செயலாளர் நாயகம் (பட்ரிசியா ஸ்கொட்லண்ட்) அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக செயலாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அந்த வகையில் நாட்டிற்கான ஐந்து நாள் பயணத்தில், அவர் ஜனாதிபதி விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.

அத்துடன் பெப்ரவரி 3 திகதியன்று, கடல்சார் சிந்தனைக் களஞ்சியமான புவிசார் அரசியல் வரைபடத்தில் அவர் விரிவுரை ஆற்றவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி நாட்டை விட்டு செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version