கல்பிட்டி உச்சுமுனை தீவை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

தீவின் குத்தகை மூலம் கிடைக்கும் வருமானம் 417.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளுடன் குத்தகை ஒப்பந்தம் மே 11ஆம் தேதி கையெழுத்தானது, ஒப்பந்தம் கையெழுத்தான இரவோடு இரவாக முகவர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது.

உச்சுமுனை தீவை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் 2021 இன் பிற்பகுதியில் இறுதி செய்யப்பட்டன, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது மட்டுமே எஞ்சியுள்ளது.

உச்சுமுனை தீவு சுமார் 1500 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் ஏற்கனவே சுமார் 200 மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன.
உச்சுமுனை தீவு பல்லுயிர் வளம் நிறைந்த சுற்றுச்சூழல் என்று கூறப்படுகிறது.

Share.
Exit mobile version