கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவி மீது அமிலம் (அசிட்) வீச முற்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுமாகம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தந்தையுடன் முச்சக்கர வண்டியில் கேகாலை நகரில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்த மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞர் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்து வீதியை மறித்து முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்த பாடசாலை மாணவியின் கழுத்தை நெரித்து அமிலம் வீச முற்பட்டுள்ளார்.

இதன்போது மாணவியின் தந்தை அமில போத்தலை பறித்து இளைஞன் மீது வீச முற்பட்ட சமயத்தில் மாணவி, அவரது தந்தை மற்றும் இளைஞர் தீக்காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கேகாலை – ஹெட்டிமுல்ல, உடுமாகம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும், அவரது 45 வயதுடைய தந்தையும், கேகாலை நகரில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Exit mobile version