புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவியேற்றுள்ளனர்
அந்தவகையில்:
1. தினேஷ் குணவர்த்தன – பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள்
2. ஜிஎல் பீரிஸ் – வெளிநாட்டு விவகாரம்.
3. பிரசன்னா ரணதுங்க – நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி
4. காஞ்சனா விஜேசேகர – எரிசக்தி மற்றும் மின்வலு
என்றவாரு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சபைத் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாகவும், பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளப்படும் என அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.