உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவினுடைய மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில், அவர் அங்குகூடிய மக்களில் ஏற்படுத்திய கடுமையான தாக்குதலினால் காரணமாக ஏற்பட்ட காயங்களினால் வெளியாகிய இரத்த போக்கு நிலைமையினால் தான் பாராளுமன்ற உறுப்பினர் இறந்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இலங்கையில் ஏற்பட்டிருந்த குழப்பங்களின்போது போது நிட்டம்புவவில் பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையதினைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கட்டிடமொன்றில் தஞ்சம் புகுந்திருந்ததுடன். பின்னர் பொதுமக்களினால் கட்டிடத்தை சுற்றி வளைத்த காரணத்தினால் அவர் தனது சொந்த துப்பாக்கியினால் தற்கொலை செய்து கொண்டதாக திடுக்கிடும்தகவலொன்று வெளியாகியிருந்தது.
மேற்க்கூறிய பொலனறுவை மாவட்டத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினரின் இறப்பு தொடர்பாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியினுடைய (ஜேஎம்ஓ) பிரேத பரிசோதனையின் போது உறுப்பினர் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களின் அதிக இரத்தப்போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர் பாரிய தாக்குதலுக்கு உள்ளானதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எம்.பி.யின் மரணம் பல காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் உள் இரத்தப்போக்கு காரணமாகவே உயிரியிழந்திருக்கின்றார்.ஆனால் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இல்லை” என்று லங்காதீப செய்தித்தாள் அறிக்கையை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
குறித்த நிலைமையின் போது அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயத்தின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், அவரின் உடலில் தோட்டா ஒன்று இருந்ததாகவும் இவ் பிரேத பரிசோதனையினுடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாதுகாப்பு அதிகாரியும் பாரிய தாக்குதலினால் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவுமம், இதனால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தரோ தற்கொலை செய்து இறக்கவில்லை என்றும், மாறாக மக்களின் பாரிய தாக்குதலினால் ஏற்பட்டிருந்த காயங்களினால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் ஜேஎம்ஓ உறுதியாக தெரிவித்துள்ளது.