பாணந்துறை – பண்டாரகம வீதியில் அலுபோமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகமவில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த கார் வீடொன்றின் மதில் மற்றும் வாயிலில் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மூன்று யுவதிகளும், மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Exit mobile version