ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபாய் நட்டஈட்டு தொகையை செலுத்துவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளரும், சிங்கள மொழிக் கலைஞருமான சுதத்த திலகசிறி கொழும்பு – கோட்டையில் உண்டியல் குலுக்கி பணம் சேகரித்துள்ளார்.

திரட்டப்பட்ட 1,810 ரூபாய் பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் கையளித்துள்ளார்.

நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் நட்டஈட்டை செலுத்தும் அளவுக்கு தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் புறக்கோட்டை வியாபாரிகள் நிதியுதவி வழங்கினால் அதனை பெற்றுக்கொள்வேன் ஏனெனில் என்னிடம் நிதியில்லை என பாராளுமன்றத்தில் அவர் நேற்றும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version