உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில், பாடசாலையில் இருந்த மாணவர்களும் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ஆபத்துகால உதவிக்கான ஹெலிகாப்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share.
Exit mobile version