தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்படாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்டம் கட்டமாக திறைசேரியினால் இதற்கான நிதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக பணத்தை அச்சிட முடியாது எனவும், கடன் மறுசீரமைப்பு மற்றும் அத்தியாவசிய கடன்களை மீள செலுத்தல் தவிர்ந்த வேறு எந்தவொரு காரணிக்காகவும் பணத்தை அச்சிட அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே அராசங்கத்தின் கொள்கையாகும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை மீறப்பட்டால் இதனை விட பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு 8 பில்லியன் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இம்முறை நாட்டு நிலைமைகளுக்கமைய இந்த செலவுகள் இரு மடங்காக அதிகரிக்கக் கூடும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version