இலங்கை மின்சார சபைக்கு வழங்க வேண்டிய 108 பில்லியன் ரூபாவை வழங்கவில்லையாயின், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் தற்போது பெற்றுக்கொள்ளும் எரி எண்ணெய், நெப்டாவிற்கான கட்டணத்தையேனும் செலுத்த முன்வர வேண்டும் என கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.