முட்டை இறக்குமதிக்கான சுகாதார பரிந்துரைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விநியோகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள போதிலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பரிந்துரை கிடைக்காமை காரணமாக அந்த நடவடிக்கை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version