வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் தேர்தலை நடத்துமாறு கோரி குரல் எழுப்புவது பரிதாபகரமான உணர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து அடைந்துள்ள நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்வதே பிரச்சினை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version