சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டின் மிக மோசமான விமானப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளிகள் துக்க தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

நேபாள பிரதமர் திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக அறிவித்தார், மேலும் பேரழிவுக்கான காரணத்தை ஆராய அரசாங்கம் ஒரு விஷேட குழுவை அமைத்தது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்காராவுக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் குறைந்தது 68பேர் உயிரிழந்தனர்.

யெட்டி எயார்லைன்ஸ் விமானம், விமான நிலையத்தை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. விபத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நூற்றுக்கணக்கான நேபாள மீட்பு பணியாளர்களை உள்ளடக்கிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இருள் காரணமாக இரவு முழுவதும் இடைநிறுத்தப்பட்டது, ஆனால் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தொடங்கியுள்ளது.

முன்னதாக, உள்ளூர் தொலைக்காட்சி அறிக்கைகள் விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள சேதி ஆற்றின் பள்ளத்தாக்கில் தரையில் மோதிய விமானத்தின் எரிந்த பகுதிகளைச் சுற்றி மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவதைக் காட்டியது.

72 பயணிகள் மற்றும் பணியாளர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற போது, பலத்த காயம் அடைந்த பலர் உயிர் பிழைத்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Exit mobile version