தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதற்கமைய அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்ரேலிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

31 வயதான தனுஷ்க குணதிலக்க, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தார்.

இதன்போது டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில், நீதவான் டேவிட் பிரைஸ், இன்று(வியாழக்கிழமை) இந்த வழக்கை பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அத்துடன், தனுஷ்க பெப்ரவரியில் நீதிமன்றில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கான கடுமையான நிபந்தனைகள் மற்றும் இரவு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு என்பன தொடர்கின்றன.

அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் சமூக ஊடகங்கள் அல்லது டேட்டிங் செயலிகளை பயன்படுத்தவும் தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version